யாழ்ப்பாணச் சரித்திரம் |
யாழ்பாணத்திலேயுள்ளவர்க்குஇ யாழ்பாணத்தினது பூர்வோத்தர சரித்திரத்தை அறிவது அவசியமும் ஆனந்தமுமாம் யாழ்பாணத்தை பூகோள படத்திலே நோக்கும்போது அதுகடுகுபிரமாணமாய்த் தோன்றினும் அதன் சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாகின்றது. யாழ்பாணம் சிறியதாயினும் அதிலிருந்தரசியற்றியசிலவரசர்இ தமது பாராக்கிரமத்தினாலே இலங்கை முழுதையுங் கட்டியாண்டதோடுஇ பாண்டிநாடு சேரசோழ நாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிக்கொண்டிருக்கின்றார்;கள். என்றால் அதன் சரித்திர பெருமை கூறவும் வேண்டுமோ. 1505ல் இலங்கைக்கு வந்த பறங்கிக்காரர்; இலங்கையில் அநேக நாடுகளை சிங்களவரசர்;பாற் கவர்;ந்தப்பின்னரும் நூறுவருஷஞ் சென்றே யாழ்பாணத்தை பிடித்தார்;கள். அவர்;கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் நிருவகிக்க முடியாது தோற்றோடினார்;கள் என்பர்;. சமாதானமாகி யாழ்பாணத்தரசர் தமது நாட்டை பறங்கிக்காரர் காலத்திலுங் கைவிடாது நூறுவருஷம் ஆண்டார்களென்பது உண்மை. பறங்கிகாரரோடு பொருது நிருவகிக்கவாற்றாத சிங்களவரசர் சிலர் யாழ்பாணத்தரசரிடம் அடைக்கலம் புகுந்தார்கள் என்பது இலங்கை சரித்திரத்தாற் றுணியக்கிடத்தலின்இ பறங்கிக்காரர் காலத்தும்யாழ்பாணம் வலிய அரசுடையதாயிருததென்பது திண்ணம். |